பொன் விளையும் மண் உரும்பிராய்
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்தனவே” இது ஒரு பொன்மொழி. ஒவ்வொருவருக்கும் தமது நாட்டைப்போல், தம்மைப்பெற்ற தாயைப் போல் உலகில் சிறப்பும், இன்பமும் தருவது வேறொன்றுமில்லை. ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு ஊருக்கும் அவற்றிற்கென தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. அதேபோல்த்தான் நான் பிறந்த உரும்பிராய் மண்ணுக்கும் தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளைப்போல் எமது உரும்பிராய் மண்ணும் நான்கு கோணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மேற்காக ஓடும் கோப்பாய் வீதியும், வடக்குத் தெற்காக ஓடும் பலாலி வீதியும் எம்மண்ணை நடுவே ஊடறுத்துச் செல்கின்றன. கோப்பாய், நீர்வேலி, அச்செளு, போயிட்டி, ஊரெளு, சுண்ணாகம், இணுவில், கோண்டாவில் என்கின்ற ஊர்கள் எம் ஊரைச் சுற்றி அமைந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்திற்கும், காங்கேசன்துறைக்கும் நடுவில் எம் உரும்பிராய் மண் அமைந்திருப்பதும் அதற்கு ஓர் சிறப்பாகும். பெரும்பாலான சைவத்தமிழர்களைக் கொண்ட உரும்பிராய் மண் பல காலத்தால் முந்திய ஆலயங்களைக் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. உதாரணமாக கருணாகரப்பிள்ளையார் கோவிலை சொல்லலாம். அதை மற்றும் பல கோவில்களை கொண்டது இந்த உரும்பிராய் மண்.
இவ்வூரின் மேற்கு எல்லைக்கு அருகில் பிள்ளையார், முருகன், அம்மன் ஆகிய கடவுளர்களுக்கான மூன்று கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. இவற்றுள் கருணாகரப் பிள்ளையார் கோயில், காலத்தால் முந்தியது. கருணாகரத் தொண்டைமானால் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவற்றைவிட, கற்பகப் பிள்ளையார் கோயில், ஞான வைரவர் கோயில், என்பனவும் இங்கேயுள்ளன. ஆண்டு தோறும் ஆடு,கோழி ஆகியவற்றைப் பலி கொடுத்து விழாவெடுக்கும் வழக்கத்தை மிக அண்மைக்காலம் வரை கொண்டிருந்ததும், யாழ் மாவட்டத்தில் பரவலாக அறியப்பட்டதுமான காட்டு வைரவர் கோயிலும் இங்கேதான் அமைந்துள்ளது. கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதை அரசு தடை செய்ததனால் இவ் வழக்கம் கைவிடப்பட்டது.
பல பண்டிதர்களையும், கல்விமான்களையும் தன்னகத்தே கொண்டது உரும்பிபராய் மண்ணாகும். உரும்பிராய் மண்னுக்கு பெருமை சேர்க்கும் மற்றோரு விடையம்;, உரும்பிராய் இந்துக்கல்லு}ரி. உரும்பிராயில் இப்போது பல பாடசாலைகள் இருக்கின்றன. தாய் தமிழின் மேல் தாளாத பற்றுக்கொண்ட ஆறுமுக நாவலர் ஆரம்பித்த பாடசாலை யாழ் இந்துக் கல்லு}ரி. முதலாம் உலக மகா யுத்தத்தின்போது இதன் கிளைகளில் ஒன்றாக எமது உரும்பிராய் இந்துக்கல்லூரியும் இருந்தது என்ற பெருமையும் இதற்குண்டு. இப்போது பல கல்விமான்களை உருவாக்கிய பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து நிற்கின்றது. யாழ் நாகரிலேயே சற்ற பெரிய பாடசாலைகளில் இதுவும் ஒன்று எனலாம. பல கல்விமான்கனை உருவாக்கிய பெருமையும், உருவாக்கி கொண்டிருக்கின்ற பெருமையும் இப்பாடசாலைக்கு சேரும்.
உரும்பிராய் மண் காலில் பட்டால் அந்த சிவப்பு நிறம் உடனே ஒட்டிக்கொள்ளும். அதேபோல் எமது மண்ணில் கலடி எடுத்து வைத்தவர்களை ஒருபோதும் கைவிட்டதாக சரித்திரமே இல்லை. வியாபாரம் செய்ய வருவோர் வேலை பரர்க்க வருவோர், குடியிருக்க வருவோர் கும்மாளம் அடிக்க வருவோர், கல்வி கற்க வருவோர் கல்வி கற்பிக்க வருவோர், சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்தும், பல கல் தொலைவிலிருக்கும் ஊர்களிலிருந்தும் மக்கள் தினமும் வந்துகொண்டேயிருப்பார்கள். எமது ஊரான உரும்பிராயும், உரும்பிராய் மண்ணில் பிறந்த மக்களில் பலரும் உலகப் புகழ் பெற்றவர்கள். இவர்களைப் பெற்றதினால் நிலவளமும், நீர்வளமும், பொருள்வளமும் கொண்ட எமது மண், புகழ்வளமும் கொண்டு பெருமை கொள்கின்றது.
நீர்வளமும் நிலவளமும் உழைப்பாளிகளையும் தன்னகத்தே கொண்ட உரும்பிராய் மண்ணின் விவசாயமே முண்ணனி வகிக்கின்றது. மரவள்ளிக்கிழங்கு, வாழை போன்ற பிரதான உற்பத்திகளும் அது தவிர இணை காய் கறி வகைகளையும் உரும்பிராய் மக்கள் பயிரிடுவது வழமை. அது போல புதிதாக அறிமுகப்படுத்தும் தானிய வகைகளை பயிரிட்டு வெற்றியீட்டுவதிலும் உரும்பிராய் மண் சளைத்ததல்ல. 1980ம் ஆண்டு காலப்பகுதியில் உரும்பிராயில் திராட்சை, உருளைக்கிழங்கு என்பன பயிரிடப்பட்டு வெற்றியீட்டப்பட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.
பொன் விளையும் பூமி எங்கள் உரும்பிராய். மண்ணை நம்பி வாழும் விவசாயிகளால் எப்போதும் பசுமையாகவே காட்சியளிக்கும். கரிய பனைகளும், உயரிய தென்னைகளும், இன்னருங்கனிச் சோலைகளும், இனிய நீர்ச் சுனைகளும் இங்கே ஆயிரமாயிரம். ஊரெங்கும் பரந்திருக்கும் வழிபாட்டுத்தலங்களும், கல்விக்கூடங்களும் காரியாலயங்களும், வியாபார நிலையங்களும், விளையாட்டுத்திடல்களும் எம்மவரின் திறன்களைப் பறைசாற்றி நிற்கின்றன. மரவள்ளிக்கிழங்கு, வாழை போன்ற பிரதான உற்பத்திகளும் அது தவிர இணை காய் கறி வகைகளையும் உரும்பிராய் மக்கள் பயிரிடுவது வழமை. அது போல புதிதாக அறிமுகப்படுத்தும் தானிய வகைகளை பயிட்டு வெற்றியீட்டுவதிலும் உரும்பிராய் மண்ண சளைத்ததல்ல.
|