முக்கிய தலங்கள்




முக்கிய தலங்கள்

சிவபூதநாதேசுவரர் ஆலயம்
உரும்பிராயின் கிழக்கு எல்லையில் வடபுறமாக அமைந்துள்ளது சிவபூதநாதேசுவரர் ஆலயம் நீர்வேலி, கோப்பாய், கரந்தன் கிராமங்களை அண்மித்து இக்கோயில் அமைந்திருப்பதினால் அவ்வூர் மக்களது வழிபாடு இங்கு விசேடமாக இடம்பெறுகிறது.
கமநிலங்கள் நான்கு புறமும் சூழ்ந்திருப்பதனால் பச்சைப் பசேலென அந்தச் சூழல் காட்சியளிப்பதும் ஆலயத்துக்குத் தனிச் சிறப்பை அளிக்கிறது.
சித்திரைப் பூரணையை அடுத்து வரும் அமாவாசைத் தினத்தை இறுதி நாளாகக் கொண்டு பக்திபூர்வமாக அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. விழாக்காலங்களில் இடம்பெறும் அன்னதான முயங்சிகள் பாராட்டுக்குரியவை அலங்காரத் திருவிழாவுக்கு பதிலாக மஹோற்சவங்களை நடத்துவதற்கு ஆலய பரிபாலன சபை வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஞானவைரவர் கோயில்
கோப்பாய் வீதியிலே துண்டிப் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் வைரவப்பொருமானைத் துண்டி ஞானவைரவ சுவாமி என்ற திருநாமங் கொண்டு பணிகிறார்கள். துண்டி விசேடம் பெற்றது.
சைவபிரசங்கங்கள் புராணபடனங்கள் அந்தக் காலத்தில் ஒழுங்காக நடைபெற்றன. இப்பொழுதும் நடைபெறுவதுண்டு. நேரந் தவறாமல் வைரவர் கோயில் மணி அதிகாலை ஐந்து மணிக்கு ஒலிக்கும். அந்த மணியோசை ஊரையே குதூகலிக்க வைக்கும். மக்கள் வழிபாட்டுடன் தங்கள் தங்கள் நாளாந்தக் கடமைகளையும் மேற்கொள்வதற்கு வழிசெய்வது இந்த மணி ஓசை. ஆசுகவி கல்லடி வேலுபிள்ளை, இயலிசை வாரிதி பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர், கவிஞர் சோ பத்மநாநன் முதலான அறிஞர் பெருமக்கள் ஞானவைரவசுவாமி மீது பாடப்பெற்ற பாடல்கள் நூலுருவம் பெற்றுள்ளன.
பிரயாணிகளின் பிரியமான வழிபாடுகளை ஏற்று அவர்களுக்கு எல்லாம் நல்ல வழிகாட்டுகின்றார் ஞானவைரவர் சுவாமி.
கற்பகப் பிள்ளையார் கோயில்
தொழுவார் துயர்தீர்தது அடியார்களுக்கு அருள்புரிகின்றார் கற்பகப்பிள்ளையார். கற்பகப்பிள்ளையார் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஓடையம்பதி உயர் தனிச் சிறப்புக்கு உரியது. ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பார்கள். ஆலய முகப்பில் பஞ்ச தளங்களைக் கொண்ட இராஜகோபுரம் கம்பீரமாக அமைந்திருப்பது அழகுக்கு அழகு தருவதாகும். இவ்வாலயம் ஊர்நடுவில் அமைந்திருப்பதும் ஒருசிறப்பு. இவ்வாலய மஹோற்சவம் ஆனிப்பூரணையைத் தீர்த்தத் தினமாகக் கொண்டு நடைபெறுகின்றது. ஒரு காலத்தில் பத்துத் திருவழாக்களே நடந்தன. இப்பொழுது பதினைந்து திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. அழகிய சித்திரத்தேரும் உண்டு.
தெற்கு மேற்கு வீதிகளில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயமும், கிழக்கில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபமும்;, வடபால் கமநிலமும் சூழ இருப்பதும் பலவகைக் காட்சிகளாக அமைந்துள்ளன. கற்பகவிநாயகர் திருவந்தாதி என்ற நூலினைக் கவிஞர் செ. ஐயாத்துரை அவர்களும் கற்பகவிநாயகர் அந்தாதி என்ற நூலினைக் கோயிலாக் கண்டியைச் சேர்ந்த ஆசிரியரான சு. பொ. குழந்தை வடிவேலு அவர்களும், இயற்றி வெளியீடும் செய்துள்ளனர்.
கற்பகவிநாயகர் பொற்பாதம் பணிவோர் நற்கதிபெறுவர்.
பர்வதவர்த்தனி அம்மன் கோயில்
கிராமத்துக்கு ஒரு அம்மன் கோயில் என்ற பெருமை இக்கோயிலுக்கு உண்டு. பர்வதவர்த்தனி அம்பாள் எழுந்தருளியுள்ள இடமும் பரத்தைப்புலமே. வைகாசிப் பூரணையைத் தீர்த்தநாளாகக் கொண்டு பத்துத் தினங்கள் மஹோற்சவம் நடைபெறுவது வழக்கம். சித்திரத்தேர் சிறப்பானது பங்குனித் திங்களில் பொங்கல் பூசை என்பன நேர்த்தியாக நடைபெறும் நவராத்திரிபூசை அந்தக் இந்தக் காலந்தொட்டே சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. உரும்பிராய் பர்வதவர்த்தனி அம்பாளின் மானத்ப+த்திருவிழா இந்தக் கிராமத்தில் ஓர் எழுச்சி விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது. பர்வதவர்த்தனி அம்பாள் மீது அடியார்கள் தோத்திரங்களைப் பாடியிருக்கின்றார்கள். பர்வதவர்த்தனி அம்பிகை அந்தாதி என்ற நூலினைக் கவிஞர் செ. ஐயாத்துரை அவர்கள் பாடி அரங்கேற்றியுள்ளார்.
சிதம்பர சுப்பிர மணிய சுவாமி கோயில்
பரத்தைப்புலம் என்னும் குறிச்சியிலேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது. கிராமத்தில் உள்ள ஒரேயொரு கந்தசுவாமி கோயில் இதுவொன்றேயாகும். ஒருகாலத்திற் கீலமடைந்திருந்த இவ்வாலயம் சைவப் பெரியார்களின் முயற்சியினால் புனருத்தாரணஞ் செய்யப்பட்டு நான்கு தசாப்பதங்களாகப் பூசை திருவிழாக்களுடன் நன்கு நடைபெற்று வருகிறது உரும்பிராயில் ஒரு கதிர்காமம் என்ற சிறப்பைத் தன்னகத்தே கொண்டது. இங்கே அலங்காரத் திருவிழாக்கள் கரிகாமத் திருவிழாக்காலத்திலே நடைபெற்று வந்தன. தொடர்ந்தும் இடம்பெறும்.
தைபூசத் திருநாளைத் தீர்த்தோற்சவ தினமாக கொண்டு இந்த ஆண்டு (1993) இங்தே முதன்முதலாக மஹோற்சவம் நடைபெற்றது. வழிகாட்டியாக இருந்து இம் மஹோற்சவத்தை முதன்முதலாக நடத்தி வைத்த பெருமையைப் பெறுகின்றார் உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயிலின் பிரதம சிவாச்சாரியர் ‘ சிவாச்சார்யமணி” சிவஸ்ரீ வை. சபாரத்தினக் குருக்கள் அவர்கள்.
வாகீசகலாநிதி கி. வா. ஜகந்நாதன், கவிஞர் செ. ஐயாத்துரை முதலானவர்கள் சிதம்பரசுப்பிரமணிய சுவாமி மீது துதிப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர். சிதம்பர சுப்பிரமணிய சுவாமி பற்றிய கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.
கருணாகரப்பிள்ளையார் கோயில்
யாழ்ப்பாணத்தை அரசுபுரிந்த விஐயகூழங்கைச் சக்கரவர்த்தி காலத்துக்கும் முந்திய பூர்வீக ஆலயம் இதுவாகும். வியகூழங்கைச் சக்கரவர்த்தி கருணாகரப்பிள்ளையாரை வணங்கி அருள்பெற்றதாகவும், திருப்பணிக்கு உதவியதாகவும் சரித்திரம் கூறுகிறது. அந்தணர் பரம்பரையினர் இவ்வாலயத்தைப் பரிபாலித்து வருகின்றார்கள். பழைமையையும் பெருமையையும் எடுத்துக்காட்டும் வகையில் கல்வெட்டுச் சாசனமும் உண்டு. பிரசித்திபெற்ற பிள்ளையார் கோயில்களின் வரிசையில் இவ்வாலயமும் சேர்க்கப்பட்பட்டுள்ளது.
(சைவநெறி - ஆண்டு11)

ஆவணிப் பூரணையை இறுதி நாளாக வைத்து மகோற்சவம் இடம்பெறும். பத்துத் தினங்கள் இடம்பெறும் இம் மகோற்சவம் 1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக அறிஞர்கள கூறுகின்றார்கள். 1973ஆம் ஆண்டு புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக விழாவினையொட்டி ஆலய திருப்பணி சபையினால் வெளியிடப் பெற்ற மஹாகும்பாபிஷேக மலர் பொன் மலர் என்னும் பாராட்டினைப் பெற்றது.
நீர்வேலி சிதம்பரநாதப் புலவர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, கவிஞர் செ. ஐயாத்துரை என்பவர்கள் கருணாகரப்பிள்ளையார் கோயில் மீது வௌ;வேறு காலங்களிற் பிரபந்தங்களைச் செய்துள்ளனர். தனிப் பாடல்களும் உண்டு. மருதநிலைச் சூழலில் பரத்தைப் புலம் என்று கூறப்பெறும் திவ்விய ஷேத்திரத்தில் எல்லாம்வல்ல கருணாகரப்பிள்ளையார் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்றார். கருணாகரன் பாதம் கனவிலும் துணை செய்யும்”


நன்றி
ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம்
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992
 


Back home - Click image to download.

 
ஐரோப்பிய நேரம்
 
உங்களுக்காக
 

urumpirai.net
தொடர்புகொள்ள
 
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை நாம் கண்டிப்பாக கவனத்தில் எடுத்து கொள்வோம். இவ் இணைய தள முகவரியை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பி அவர்களும் பயனடைய உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம் நன்றி | உரும்பிராய் இணையத்தள ஆசிரியர் குழு urumpirai@live.com pirasath@live.fr
இந்த இணையத்தளம் பற்றிய உங்கள் கருத்துகளை தெரிவிக்க...... இணையஅஞ்சல் முகவரி pirasath@live.fr 0033619661650 urumpirai@live.com என்னுடன் இலவசமாக தொடர்புகொள்ள (skype) SKYPE இனை உபயோகியுங்கள் pirasath20
விளம்பரகள்
 
jaffna logo Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Free counter and web stats
 
Aujourd'hui sont déjà 4 visiteurs (5 hits) Ici!
Ce site web a été créé gratuitement avec Ma-page.fr. Tu veux aussi ton propre site web ?
S'inscrire gratuitement