|
|
|
பாடசாலைகள்
சந்திரோதய வித்தியாசாலை
உரும்பிராய்ச் சந்தியின் அயலிலுள்ள காணியில் 28.10.1982 இல் ஆரம்பிக்கப்பெற்ற உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை. மாணவர் கூடக்கூட இடநெருக்கடியும் ஏற்பட்டது. எனவே மானிப்பாய் வீதியில் உள்ள காணியில் கட்டடங்களை அமைத்து அந்த இடத்துக்கு வித்தியாசாலையை மாற்ற (1942) நேரிட்டது. சந்திரோதய வித்தியாசாலை இப்பொழுது இமைந்திருக்கும் வளவும் உரும்பிராய் கற்பகவிநாயகர் ஆலயபரிபலான சபையினரிடமிருந்து குத்தகைக்குப் பெறப்பட்டதே. ஆண்டு 1 தொடங்கி ஆண்டு 8 வரை கொண்டதாக இயங்கிவரும் உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை அறிஞர்கள் பலரை உருவாக்கிய கல்விக்கூடம் என்பதை நாம் மறத்தலாகாது. இவ்வித்தியாலயத்தின் தோற்றத்துக்கு உழைத்தவர்களில் திரு. ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் (இராசா - வேலுப்பிள்ளை) முக்கிய இடம்பெறுவார்கள்.
|
றோமன் கத்தோலிக்க பாடசாலை
கத்தோலிக்க சமயக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி கருதி 18.10.1916 இல் நிறுவப்பட்டதே உரும்பிராய் றோமன் கத்தோலிக்க பாடசாலை. சமய அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை சமயசேவை புரிந்ததுடன் விஷேடமாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தது என்பதைக் கல்வியில் நாட்டமுள்ள பெரியவர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
இது இன்று ஆரம்பாடசாலையாகப் பிரகாசிக்கின்றது. அரசு பாடசாரைலகளைக் கையேற்ற பொழுதிலும் அடிப்படை நோக்கத்திற்கு முரணின்றி இப்பாடசாலை இயங்குகின்றது.
ஒரு காலத்தில் சமயத்தைப் பரப்பும் அடிப்படை நோக்கில் கிறிஸ்தவ பாடசாலைகள் அமைக்கப்பட்டன. இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அங்கிலிக்கன் சபை உரும்பிராயிலும் ஒரு பாடசாலையை நிறுவியது. ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளையும் கற்பிக்கும் பாடசாலையாக இயங்கியது. இந்துக் கல்லூரி அதிகார சபையினர் ஆங்கில பாடசாலையொன்றைஉரும்பிராயில் நிறுவியதனால் கிறிஸ்தவ பாடசாலையில் உள்ள ஆங்கிலப்பகுதி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ் மட்டும் போதிக்கப்பட்டு வந்தது. அரசாங்கம் பாடசாலைகளைக் கையேற்றதையடுத்து இப்பாடசாலை மூடப்பட்டது. உரும்பிராயில் முதன்முதல் ஆரம்பித்த பாடசாலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
சைவத்தமிழ் வித்தியாலயம்
03.12.1915 இல் உரும்பிராய் இந்துக் கல்லூரி வளவில் இந்துக் கல்லூரி அதிகார சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாடசாலையே சைவத் தமிழ் வித்தியாசாலை, இடநெருக்கடி காரணமாக 1949 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஓடையம்பதி கற்பகவிநாயகர் ஆலயத்துக்கு உரிமையான காணியிற் கட்டடங்கள் அமைக்கப்பட்டு கற்பகபிள்ளையார் வீதியில் சைவத் தமிழ் வித்தியாசாரலை இடமாற்றம் செய்யப்பட்டது.
ஆண்டு 1 தொடங்கி ஆண்டு 11 வரை வகுப்புக்களை கொண்டு இயங்கும் சைவத்தமிழ் வித்தியாசாலை கோப்பாய் வட்டாரத்தில் அமைந்துள்ள கனிஷ்ட வித்தியாலயங்களிற் பிரபலம் வாய்ந்தது எனலாம். 1977 ஆம் ஆண்டு நடைபெற்றது வைரவிழா. வைரவிழா மலர் வெளியீடு சிறப்பம்சமாக இடம்பெற்றது. இப்பொழுது இடம்பெறுவது பவளவிழா, பவளவிழா மலர் சிறப்புடன் வெளிவருகின்றது.
உரும்பிராயின் கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ள உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தின் வியத்தகு முன்னேற்றத்துக்கு எல்லாம்வல்ல கற்பக விநாயகரின் திருவருளே காரணம் என்பது எமது நம்பிக்கை.
|
உரும்பிராய் இந்துக் கல்லூரி
1911 ஆம் ஆண்டு இவ்வூர் பிரமுகர்களின் ஒத்துழைப்புடன் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இக் கல்லூரி சமீபத்திற் பவளவிழாவைக் கொண்டாடியதுடன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகளை உள்ளடக்கிய பவளவிழா மலரினையும் வெளியீடு செய்தது. ஆங்கில மொழிக்கு அந்தஸ்து இருந்த காலத்தில் உரும்பிராய் மாணவர்களும், அயலூர் மாணவர்களும் சமயக் கோட்பாடுகளையும் ஆங்கில மொழியையும் நன்கு அறிந்துகொள்ள உதவியது உரும்பிராய் இந்துக் கல்லூரி. அறிஞர்கள் பலர் இந்தவூரில் உருவாவதற்கு இக்கல்லூரி உழைத்த உழைப்பு மகத்தானது. மகாவித்தியாலய அந்தஸ்தினை முன்னரே பெற்றுக் கொண்ட உரும்பிராய் இந்துக் கல்லூரி உரும்பிராய்க் கொத்தணியின் மூலாதாரப் பாடசாலையுமாகும்.
ஒரு காலத்தில் சமயத்தைப் பரப்பும் அடிப்படை நோக்கில் கிறிஸ்தவ பாடசாலைகள் அமைக்கப்பட்டன. இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அங்கிலிக்கன் சபை உரும்பிராயிலும் ஒரு பாடசாலையை நிறுவியது. ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளையும் கற்பிக்கும் பாடசாலையாக இயங்கியது. இந்துக் கல்லூரி அதிகார சபையினர் ஆங்கில பாடசாலையொன்றைஉரும்பிராயில் நிறுவியதனால் கிறிஸ்தவ பாடசாலையில் உள்ள ஆங்கிலப்பகுதி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ் மட்டும் போதிக்கப்பட்டு வந்தது. அரசாங்கம் பாடசாலைகளைக் கையேற்றதையடுத்து இப்பாடசாலை மூடப்பட்டது. உரும்பிராயில் முதன்முதல் ஆரம்பித்த பாடசாலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
|
|
|
|
|
|
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்களின் ஆக்கபூர்வமான
கருத்துக்களை நாம் கண்டிப்பாக கவனத்தில் எடுத்து கொள்வோம்.
இவ் இணைய தள முகவரியை உங்கள் நண்பர்கள்
உறவினர்களுக்கு அனுப்பி அவர்களும் பயனடைய உதவுமாறு
வேண்டிக் கொள்கிறோம் நன்றி | உரும்பிராய்
இணையத்தள ஆசிரியர் குழு
urumpirai@live.com
pirasath@live.fr
இந்த இணையத்தளம் பற்றிய உங்கள்
கருத்துகளை தெரிவிக்க...... இணையஅஞ்சல் முகவரி
pirasath@live.fr
0033619661650
urumpirai@live.com
என்னுடன் இலவசமாக தொடர்புகொள்ள (skype)
SKYPE இனை உபயோகியுங்கள்
pirasath20 |
|
|
|
|
|
|
|
|